தழும்பு!
விடிந்தது. அப்பாடா... சூரியனின் முதல் மஞ்சள் கதிர்களை இவ்வளவு ஆசையுடன் அவள் இதுவரை எதிர்பார்த்து காத்திருந்ததில்லை. உள்ளே நுழைந்த நர்ஸ் மாதவி, ''என்ன மேடம்... எப்ப விடியும்ன்னு கத்திட்டிருந்தீங்க போலிருக்கு,'' என்ற அவள் குரலிலும் உற்சாகம். லேசாக... ஆனால், மகிழ்ச்சியாக சிரித்தாள் நந்தினி. இனி, ஆஸ்பத்திரி வாடையை பிடித்து துாங்க வேண்டாம். நோயாளிகளின் முனகல்கள் கேட்காமல், மருந்துகளின் நெடி இல்லாமல், நர்சுகளின் இரவு நேர, 'செக் -- அப்' தொல்லை இல்லாமல், ஆரோக்கியமான சூழலில் குடும்பத்துடன் வாழலாம். நேற்றே, 'டிஸ்சார்ஜ் ஷீட்' பூர்த்தி செய்து கொடுத்து, பில்லும் கட்டி விட்டான், வாசு. அவனுடைய, கார் காலை, 8:00 மணிக்கு வரும். ''இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு... உங்க கணவர் வர... காபி கொண்டு வரட்டுமா... சூடான இட்லியும், கேன்டீனில் ரெடியாகி இருக்கும்.'' ''நன்றி சிஸ்டர்... இப்ப எதுவும் சாப்பிடத் தோணலை... வீட்டுக்குப் போயே சாப்பிட்டுக்கறேன். நீங்க ரொம்ப நல்லா கவனிச்சதாலே தான் சீக்கிரமா எனக்கு குணமானது.'' நந்தினி, நன்றியுடன் மாதவியைப் பா...