Posts

Showing posts from 2017

சொந்த பந்தம்

''ஏங்க... எத்தனை நாளா சொல்றேன்... பெருசுக ரெண்டையும், வீட்டை காலி செய்ய சொல்லுங்கன்னு...'' என்று மனைவி சாரதா சொன்னதும், ''அவுக பாட்டுக்கு இருக்காங்க; நமக்கு என்ன தொந்தரவா கொடுக்கிறாங்க... சும்மா இதையே சொல்றே...'' என்றான் பரமசிவம். ''உங்களுக்கென்ன... வேலை, வெட்டின்னு போயிடுவீங்க... வீட்டுல இருக்கிற எனக்குல தெரியும்... தினம் ஏதாவது, சீனி, சீரகம்ன்னு கேட்டுட்டே இருக்குது அந்த பாட்டி.'' ''பெரியவர் குப்புசாமி பென்ஷன் வாங்கியதும் மளிகை சாமான் எல்லாம் வாங்கிப் போடுறாரே... அப்புறம் என்னவாம்...'' ''அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சிக்கனம்... காலையில பேப்பர் வந்ததும் மொத ஆளா அவரு படிச்சிட்டு, அப்புறம் தான் நாம படிக்கணும். சொந்தமா ஒரு பேப்பர் வாங்கிக்க வேண்டியது தானே... ஓ.சி.,பேப்பர்; ஓ.சி., 'டிவி' இப்படியே காலத்த ஓட்டுதுக,'' என்றாள் எரிச்சலுடன்! ''விடு; அவர் படிக்கிறதால, பேப்பர்ல எழுத்தா குறைஞ்சிடுது; இல்ல, 'டிவி' கேபிள்காரன் தான் கூட பணம் கேட்கிறானா... நாம காலையில வேலை, வெட்டியா இருக்கோம்; அவர் ஓய...

சுண்டைக்காய்

தஞ்சை நாட்டை ஆண்டு வந்த தமிழ்வாணன், ஆண்டு தோறும், தன் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார். அன்று, நாட்டில் உள்ள உழவர்கள், தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை, மன்னருக்கு காணிக்கையாக வழங்கினர். மன்னரும், அவர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்து அனுப்பினார். செல்லப்பா என்பவனது நிலத்தில் ஏராளமான சுண்டைக்காய்கள் காய்த்திருந்தன. அதை கூடை கூடையாக கொண்டு போய், மன்னனுக்கு காணிக்கையாக கொடுக்க எண்ணினான். “நான், மன்னருக்கு சுண்டைக்காயை காணிக்கையாக தரப்போகிறேன், ஏராளமான பொன்னையும், பொருளையும் பரிசாக வாங்கி வருகிறேன் பார்,” என்று தன் மனைவியிடம் கூறி சென்றான் செல்லப்பா. அரண்மனையை அடைந்து, விளைபொருட்களுடன் வரிசையாக நிற்கும் உழவர்களுடன், நின்றான் செல்லப்பா. அவன் முறை வந்ததும், வணங்கி, “அரசே! உங்களுக்காக நான் சுண்டைக்காய்களை காணிக்கையாக கொண்டு வந்துள்ளேன்,” என்றான். “எனக்கு சுண்டைக்காய் பிடிக்காது என்று வீம்புக்கு கொண்டு வந்துள்ளாயா... உன்னை...” என்று பற்களை நறநறத்தார் மன்னர். “இவன் கொண்டு வந்த சுண்டைக்காய்களை, இவன் முகத்திலேயே எடுத்து அடியுங்கள்,” என்று காவலர்களுக்கு ஆணையிட்டார். சுண்டைக்காயை ஒவ்வ...

அன்பு

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி, ''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்! ''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார். சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந...

கண்ணா ஜெயிச்சுட்டே!

காலை, 10:00 மணி - ஊர் பிரமுகர்கள் சிலருடன், ஏதோ காரியமாய் போய்க் கொண்டிருந்தார் தலைவர் பழனி.அப்போது, எதிரில் வந்த கார் ஒன்று, அவர்களை பார்த்ததும், ஓரங்கட்டி நின்றது.அதிலிருந்து இறங்கிய இளைஞனை, 'யாரு...' என்பது போல் பார்த்தார், பழனி.அந்த இளைஞன், ''நான், வேலுச்சாமி மகன் கண்ணன்,'' என்றதும், பழனி உட்பட, உடன் இருந்தோரும், 'ஆஹா...' என்று ஆச்சர்யப்பட, அடுத்த நொடி பழனிக்கு ஆச்சரியம் போய், ஏமாற்றமும், குற்ற உணர்வும் எழுந்தது.''அப்புறம் என்னை வந்து பார்,'' என்று, சொல்லி, நடையை தொடர்ந்தவருக்கு, மனதில், பழைய சம்பவம் விரிந்து, ஊசலாடியது.ஊர் தலைவரான பழனி, அந்த ஊரிலேயே வசதி படைத்தவராகவும் இருந்தார். ஊர் மக்கள், அவரிடம் ஏதாவது கோரிக்கை வைக்க வேண்டும் என்றால் கூட, அவருடைய வலது கையான, மாரிசாமி மூலம், பக்குவமாய் தெரிவிப்பரே தவிர, நேருக்கு நேர் நின்று பேச மாட்டார்கள்; அவ்வளவு மரியாதை.பழனியின் பண்ணையில் வேலை செய்யும், வேலுச்சாமி மகனான கண்ணன், அப்போது, எட்டாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளி நேரம் போக, அவர் வீட்டில், எடுபிடி வேலை செய்வது வழக்கம்...

இப்படித்தான் என் மனைவி

Image
அந்தக் கதையை அவள்தான் முதலில் படித்திருந்தாள். அவள் என்றால் வேறு யாருமில்லை. என் மனைவி லட்சுமி.  "ஏங்க இந்தக் கதையைப் படித்துவிட்டீர்களா?'' கேட்டுக் கொண்டே என்னருகில் வந்தாள்.  "எந்தக் கதை?'' என்று கேட்டுக் கொண்டே கணிப்பொறித் திரையிலிருந்து கண்ணை விலக்கி ஏறெடுத்து அவளைப் பார்த்தேன். அவள் கையில் இந்த வாரப் பத்திரிகை ஒன்று இருந்தது.  நான் இன்னும் படிக்கவில்லை. "இப்பதானே வந்திருக்கு? எந்தக் கதை சொல்லு?'' நான் சொல்லி முடிக்கும் முன்னே என் கையில் வாரப் பத்திரிகையைத்  திணித்துவிட்டு இந்தக் கதையை உடனே படியுங்க'' உத்தரவு போட்டுவிட்டு அடுப்பங்கரைக்குள் போனாள். "அப்படி என்ன சமாச்சாரம் இந்தக் கதையில் இருக்கு?' யோசித்துக் கொண்டே கணிப்பொறியை அணைத்தேன்.  அவள் காட்டிவிட்டுப் போன பக்கத்தைப் புரட்டிக் கதையைப் படிக்கத் தொடங்கினேன். கால்வாசிக் கதையைப் படித்தவுடனேயே, அவள் எதற்கு இந்தக் கதையைப் படிக்கச் சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்துவிட்டது.    இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி, "இந்தக் கதையில் என்ன...

சுமை...

Image
சாயந்திரம் கலைந்து நட்சத்திரங்கள் அழுத்தமாகப் பார்வையில் பட்டன. எதிர் திசைத் தோப்புகளிலிருந்து காற்று குளிரேறி அக்ரகாரத்தை வருடிக் கொண்டிருந்தது.  வாசல் திண்ணையில் உட்கார்ந்து மனசுக்குள் பிரயாணம் செய்து கொண்டிருந்த சர்மா, முன்வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டுத் தன்னுள்ளே கலைந்தார். ‘யாரது?’ ‘நான் அப்பாசாமி, சர்மா’ இருட்டும் கொஞ்சம் வெளிச்சமும் வந்து கொண்டிருந்த அப்பாசாமி மேல் விழ, பார்வைக்கும் மனசுக்கும் அடையாளம் தெரிந்தது. ‘வாங்க அப்பாசாமி, ரொம்ப அதிசயமா இருக்கு! அஞ்சரை மணிக்குக்கூடக் கோயில்லே பார்த்தேனே? குருக்களோட பேசிட்டு இருந்தீங்க…’ ‘அதிசயமாத்தா இருக்கு..’ என்றவர் சர்மாவின் பக்கத்தில் உட்காரப் போனார். ‘இருங்க, இருங்க. ஏம்மா…வனஜா, அந்தப் பாயை எடுத்துண்டு வா’ வனஜா பாய் எடுத்து வந்ததும், அதைத் திண்ணையில் படர்த்தி அப்பாசாமியை உட்கார வைத்தார். ‘இப்பச் சொல்லுங்க…என்ன அதிசயம்?’ ‘சர்மா..உங்களால நல்ல காரியம் ஒண்ணு ஆகணும். உங்களாலே முடியும்’ ‘சொன்னாதானே ஆகும் ஆகாதான்னு தெரியும்?’ ‘உங்க பையன் ஸோனல் மானேஜரா இருக்காரே, அந்த இன்ஷுரன்ஸ் கம்பெனிலே இப்போ நம்ம...

நீதிமணி!!!

சில நாட்களாக அரண்மனையின் தானியக் கிடங்கிலிருந்து திருட்டுப் போய்க்கொண்டிருந்தது. திருடன் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தேகப்படும் நிலையில் உள்ளோரைக் கைது செய்யும்படி உத்தரவாகியிருந்தது! பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். திருடனும் அதில் அகப்பட்டிருந்தான்! ஆனால் திருடன் யாரென்று அடையாளம் காண இயலவில்லை. நீதிபதியின் முன்னால் கைதான அனைவரும் நிறுத்தப்பட்டிருந்தனர். நீதிபதி எல்லோரையும் ஒருமுறை பார்த்தார். பிறகு, "குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி வழங்கும் பொறுப்பை இறைவன் கோயில் கண்டாமணியிடம் ஒப்படைத்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அங்கே வாருங்கள்.'' என்றார். கோயில்மணி ரொம்பச் சக்தி வாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் ஒலி அவ்வூர் முழுவதற்கும் கேட்கும். அத்தனை பெரிய மணி! எல்லோரும் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். கண்டாமணி நந்தி மண்டபத்தின்முன்னால் இருந்தது. அதைச் சுற்றிப் பட்டுச் சேலை கட்டி மறைக்கப்பட்டிருந்தது. நீதிபதி கூறினார்."நீங்கள் ஒவ்வொருவரும் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து மணியின் அருகில் சென்று உங்கள் உள்ளங்கை அதில் பதியும்படி அதைத் ...

பணம்!

தலையணையில் முகம் புதைத்து, குப்புற படுத்திருந்தான், இசக்கிராஜா. அவனுக்கு அருகில், மனைவி, மருதாயும், 12 வயது மகன் மற்றும் 16 வயது மகளும் படுத்திருந்தனர். குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களுக்கும், 90 சதவீத மானியத்தில், மத்திய அரசு வழங்கிய, 'ஸ்மார்ட்' போன்கள் தலைமாட்டில், வரிசையாக, 'சார்ஜ்' ஆகிக் கொண்டிருந்தன. 'ஸ்மார்ட் போன்'களில் நூற்றுக்கணக்கான, 'ஆப்'கள் இலவசமாய் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன. ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை, திறம்பட செய்ய, 15 நாட்கள் பயிற்சி வகுப்புக்கு, குடும்பத்தோடு சென்று வந்திருந்தான், இசக்கிராஜா. படுக்கையில் இருந்து எழுந்த இசக்கிராஜா, நாட்காட்டியில் தாளை கிழிக்க, அது, ஜன., 5, 2018 என்றது! தன் மணிபர்சை திறந்து ஆராய்ந்தான். உள்ளே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாகனம் ஓட்டுவதற்கான உரிம அட்டை, வாக்காளர் அட்டை, பெட்ரோ கார்டு, ரேஷன் ஸ்மார்ட் கார்டு இருந்தன; திருப்தியானான். அவனது மொபைல் போனில் குறுஞ்செய்தி வந்ததற்கான, சங்கீத சொடுக்கல் கேட்டதும், எடுத்துப் பார்த்தான். அதில், ஏர்டெல் டி.டி.ஹெச்.,க்கான, மாதாந்திர கட...