Posts

Showing posts from January, 2017

இப்படித்தான் என் மனைவி

Image
அந்தக் கதையை அவள்தான் முதலில் படித்திருந்தாள். அவள் என்றால் வேறு யாருமில்லை. என் மனைவி லட்சுமி.  "ஏங்க இந்தக் கதையைப் படித்துவிட்டீர்களா?'' கேட்டுக் கொண்டே என்னருகில் வந்தாள்.  "எந்தக் கதை?'' என்று கேட்டுக் கொண்டே கணிப்பொறித் திரையிலிருந்து கண்ணை விலக்கி ஏறெடுத்து அவளைப் பார்த்தேன். அவள் கையில் இந்த வாரப் பத்திரிகை ஒன்று இருந்தது.  நான் இன்னும் படிக்கவில்லை. "இப்பதானே வந்திருக்கு? எந்தக் கதை சொல்லு?'' நான் சொல்லி முடிக்கும் முன்னே என் கையில் வாரப் பத்திரிகையைத்  திணித்துவிட்டு இந்தக் கதையை உடனே படியுங்க'' உத்தரவு போட்டுவிட்டு அடுப்பங்கரைக்குள் போனாள். "அப்படி என்ன சமாச்சாரம் இந்தக் கதையில் இருக்கு?' யோசித்துக் கொண்டே கணிப்பொறியை அணைத்தேன்.  அவள் காட்டிவிட்டுப் போன பக்கத்தைப் புரட்டிக் கதையைப் படிக்கத் தொடங்கினேன். கால்வாசிக் கதையைப் படித்தவுடனேயே, அவள் எதற்கு இந்தக் கதையைப் படிக்கச் சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்துவிட்டது.    இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி, "இந்தக் கதையில் என்ன...

சுமை...

Image
சாயந்திரம் கலைந்து நட்சத்திரங்கள் அழுத்தமாகப் பார்வையில் பட்டன. எதிர் திசைத் தோப்புகளிலிருந்து காற்று குளிரேறி அக்ரகாரத்தை வருடிக் கொண்டிருந்தது.  வாசல் திண்ணையில் உட்கார்ந்து மனசுக்குள் பிரயாணம் செய்து கொண்டிருந்த சர்மா, முன்வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டுத் தன்னுள்ளே கலைந்தார். ‘யாரது?’ ‘நான் அப்பாசாமி, சர்மா’ இருட்டும் கொஞ்சம் வெளிச்சமும் வந்து கொண்டிருந்த அப்பாசாமி மேல் விழ, பார்வைக்கும் மனசுக்கும் அடையாளம் தெரிந்தது. ‘வாங்க அப்பாசாமி, ரொம்ப அதிசயமா இருக்கு! அஞ்சரை மணிக்குக்கூடக் கோயில்லே பார்த்தேனே? குருக்களோட பேசிட்டு இருந்தீங்க…’ ‘அதிசயமாத்தா இருக்கு..’ என்றவர் சர்மாவின் பக்கத்தில் உட்காரப் போனார். ‘இருங்க, இருங்க. ஏம்மா…வனஜா, அந்தப் பாயை எடுத்துண்டு வா’ வனஜா பாய் எடுத்து வந்ததும், அதைத் திண்ணையில் படர்த்தி அப்பாசாமியை உட்கார வைத்தார். ‘இப்பச் சொல்லுங்க…என்ன அதிசயம்?’ ‘சர்மா..உங்களால நல்ல காரியம் ஒண்ணு ஆகணும். உங்களாலே முடியும்’ ‘சொன்னாதானே ஆகும் ஆகாதான்னு தெரியும்?’ ‘உங்க பையன் ஸோனல் மானேஜரா இருக்காரே, அந்த இன்ஷுரன்ஸ் கம்பெனிலே இப்போ நம்ம...

நீதிமணி!!!

சில நாட்களாக அரண்மனையின் தானியக் கிடங்கிலிருந்து திருட்டுப் போய்க்கொண்டிருந்தது. திருடன் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தேகப்படும் நிலையில் உள்ளோரைக் கைது செய்யும்படி உத்தரவாகியிருந்தது! பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். திருடனும் அதில் அகப்பட்டிருந்தான்! ஆனால் திருடன் யாரென்று அடையாளம் காண இயலவில்லை. நீதிபதியின் முன்னால் கைதான அனைவரும் நிறுத்தப்பட்டிருந்தனர். நீதிபதி எல்லோரையும் ஒருமுறை பார்த்தார். பிறகு, "குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி வழங்கும் பொறுப்பை இறைவன் கோயில் கண்டாமணியிடம் ஒப்படைத்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அங்கே வாருங்கள்.'' என்றார். கோயில்மணி ரொம்பச் சக்தி வாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் ஒலி அவ்வூர் முழுவதற்கும் கேட்கும். அத்தனை பெரிய மணி! எல்லோரும் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். கண்டாமணி நந்தி மண்டபத்தின்முன்னால் இருந்தது. அதைச் சுற்றிப் பட்டுச் சேலை கட்டி மறைக்கப்பட்டிருந்தது. நீதிபதி கூறினார்."நீங்கள் ஒவ்வொருவரும் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து மணியின் அருகில் சென்று உங்கள் உள்ளங்கை அதில் பதியும்படி அதைத் ...

பணம்!

தலையணையில் முகம் புதைத்து, குப்புற படுத்திருந்தான், இசக்கிராஜா. அவனுக்கு அருகில், மனைவி, மருதாயும், 12 வயது மகன் மற்றும் 16 வயது மகளும் படுத்திருந்தனர். குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களுக்கும், 90 சதவீத மானியத்தில், மத்திய அரசு வழங்கிய, 'ஸ்மார்ட்' போன்கள் தலைமாட்டில், வரிசையாக, 'சார்ஜ்' ஆகிக் கொண்டிருந்தன. 'ஸ்மார்ட் போன்'களில் நூற்றுக்கணக்கான, 'ஆப்'கள் இலவசமாய் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன. ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை, திறம்பட செய்ய, 15 நாட்கள் பயிற்சி வகுப்புக்கு, குடும்பத்தோடு சென்று வந்திருந்தான், இசக்கிராஜா. படுக்கையில் இருந்து எழுந்த இசக்கிராஜா, நாட்காட்டியில் தாளை கிழிக்க, அது, ஜன., 5, 2018 என்றது! தன் மணிபர்சை திறந்து ஆராய்ந்தான். உள்ளே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாகனம் ஓட்டுவதற்கான உரிம அட்டை, வாக்காளர் அட்டை, பெட்ரோ கார்டு, ரேஷன் ஸ்மார்ட் கார்டு இருந்தன; திருப்தியானான். அவனது மொபைல் போனில் குறுஞ்செய்தி வந்ததற்கான, சங்கீத சொடுக்கல் கேட்டதும், எடுத்துப் பார்த்தான். அதில், ஏர்டெல் டி.டி.ஹெச்.,க்கான, மாதாந்திர கட...

பரந்த மனப்பான்மை!

ஒரு ஞானியிடம் ஒரு மனிதர் தன் வாழ்வில் நிறைய துன்பங்களைச் சந்திப்பதாகவும், தொடர்ந்து ஏற்படும் வலிகளைத் தம்மால் தாங்க முடியவில்லை என்றும் புலம்பினார். ஞானி ஒரு சிறு குவளையில் ஒரு கைப்பிடி உப்பைப் போட்டுக் கலக்கினார். அதை அந்த மனிதரிடம் கொடுத்துக் குடிக்கக் கூறினார். அதைக் குடிக்க முடியாமல் அந்த மனிதர் திணறினார். "உப்புக் கரிக்கின்றது'' என்று ஞானியிடம் கூறினார். இப்பொழுது ஒரு ஜாடி தண்ணீரில் ஒரு கைப்பிடி உப்பைப் போட்டுக் கலந்தார். அதை அந்த மனிதரிடம் கொடுத்துக் குடிக்கக் கூறினார். அவர் அதைக் குடித்துவிட்டு, "இதைக் குடிக்க முடிகிறது. உப்பு லேசாகத்தான் தெரிகிறது'' என்றார். ஞானி அந்த மனிதரை அருகே உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்று அதில் ஒரு கைப்பிடி உப்பைப் போட்டார். பின்னர் ஏரியின் தண்ணீரைக் குடிக்கும்படி கூறினார். "இந்தத் தண்ணீர் நன்றாக உள்ளது...உப்பின் சுவை சிறிது கூடத் தெரியவில்லை''என்று அந்த மனிதர் கூறினார். "நான் எல்லாத் தண்ணீரிலுமே ஒரே அளவு உப்பைத்தான் போட்டேன்....அதன் தாக்கம் சிறிதளவு தண்ணீரில் அதிகமாகவும், அதிகமான தண்ணீரில் சிறிதளவும் தெ...

கைத்தடி!

கங்கை நதியில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்! அப்போது ஒரு அழகிய கைத்தடி மிதந்து வந்து கொண்டிருந்தது! எழில் மிகுந்த அழகிய வேலைப்பாடு மிகுந்த கைத்தடி அது! அதைக் கவனித்த வியாபாரி ஆசையுடன் அதை எடுத்துக்கொண்டு கரையை நோக்கி நீந்தினான். நதி வேகமாக நீர்ச்சுழல்களுடன் ஓடிக் கொண்டிருந்தது! நீந்திக் கொண்டிருந்த வியாபாரி ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்! தப்பிக்க கடும் முயற்சி செய்தான். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தான்! போராட்டத்தின் போது நதியில் தான் ஆசையாய்க் கண்டெடுத்த கைத்தடியை நழுவ விட்டுவிட்டான்! கரைக்கு வந்து சேர்ந்த அவன், அந்த அழகான கைத்தடியை இழந்துவிட்டேனே என்று கதறினான்! அப்போது அங்கு இருந்த ஒரு துறவி இதைக் கவனித்தார். அவர் வியாபாரியை நோக்கி, "அப்பா நீ இங்கு வந்தபோது வெறுங்கையோடு தானே வந்தாய்?'' என்று கேட்டார். "ஆமாம்'' "ஆனால் இப்போது கைத்தடியை நழுவ விட்டு விட்டதாகக் கூறுகிறாயே?'' வியாபாரி நதியில் நடந்ததைக் கூறினான். "உன்னைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது...கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது....,நீ அத...

செல்ல மகளுடன் ஒரு நாள்!

என்னங்க... சவுந்தர்யாவ கவனமா பாத்துக்குவீங்கள்ல...'' திரும்ப திரும்ப கேட்டாள், மீனாட்சி. ''ஒருநாள் தானே சமாளிச்சுக்குவேன்; நீ, தைரியமா போயிட்டு வா,'' என்றான் நடேசன். ''அதுக்கில்லங்க... சவுந்தர்யா, 'நார்மலான' குழந்தை இல்ல. ஒவ்வொரு நிமிஷமும், அவளை கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். நீங்க, கம்ப்யூட்டரை தொறந்து வச்சு, கதை எழுத ஆரம்பிச்சுட்டா உலகத்தையே மறந்துடுவீங்க... அதான் பயப்படுறேன்,'' என்றாள், நம்பிக்கை இல்லாமல்! ''இது கூடவா எனக்கு தெரியாது... நீ நிம்மதியா போயிட்டு வா,'' என்றான். சவுந்தர்யாவுக்கு, 10 வயதாகிறது. அவளுடைய இரண்டு வயதில், பேச்சு வரவில்லை; காதும் கேட்காதது போல் தோன்ற, ஈ.என்.டி., ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் அழைத்துச் சென்று காண்பித்ததில், 'காது கேட்கும் திறனெல்லாம் நன்றாக தான் இருக்கிறது...' என்றார். நடேசனின் அம்மாவோ, 'சில பிள்ளைகள், 'லேட்'டாக தான் பேசும்; இவனெல்லாம், ரெண்டு வயசுக்கு மேல தான் பேசினான்...' என்று, நடேசனையே உதாரணமாய் சொன்னாள். அவள் கூறியது போல், இரண்டரை வயதுக்கு மேல், கொஞ்...

சின்ன தவறும் பெரிய சறுக்கலும்!

மகன், வியாபாரம் செய்யும் அழகை, சற்று தொலைவில் இருந்து, ரசித்து பார்த்தார், மகாலிங்கம். வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய அங்காடி அது! 10 ஆயிரம் சதுர அடியில், 'ஏசி' வசதியுடன், 40 ஊழியர்களுடன், இயங்கியது. ஆண்டு, 'டர்ன் ஓவர்' பல கோடி. 'சிட்டியில் நம்பர் ஒன் கம்பெனி...' என்று பேரெடுத்து, வெற்றிகரமாக நடக்கிறது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், பத்துக்கு பத்து வாடகை இடத்தில், ஒரு சில பொருட்களுடன் துவங்கப்பட்டது. கடுமையான உழைப்பில், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இன்று ஆலமரமாய் நிற்கிறது. 'தனக்கு பின் யார் கவனிப்பர்...' என்ற கவலைக்கு இடம் கொடுக்காமல், மகன் பரத், பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் மனம் பரவசம் அடைந்தது. சென்ற ஆண்டு தான், பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தான். 'படிப்பு வேறு, அனுபவம் வேறு. இவன் வியாபாரத்தை கற்று பொறுப்புக்கு வர நான்கைந்து ஆண்டுகளாகலாம்...' என்று நினைத்திருக்க, சில மாதங்களிலேயே, தொழில் நுணுக்கங்களை கற்று, வியாபாரத்தை, மேலும் அதிகரிக்க செய்ததில் மகாலிங்கத்துக்கு பெருமை. கம்பெனி பிரதிநிதியே, அவர்களது புது மாடல் குளிர்...