பரந்த மனப்பான்மை!

ஒரு ஞானியிடம் ஒரு மனிதர் தன் வாழ்வில் நிறைய துன்பங்களைச் சந்திப்பதாகவும், தொடர்ந்து ஏற்படும் வலிகளைத் தம்மால் தாங்க முடியவில்லை என்றும் புலம்பினார். ஞானி ஒரு சிறு குவளையில் ஒரு கைப்பிடி உப்பைப் போட்டுக் கலக்கினார். அதை அந்த மனிதரிடம் கொடுத்துக் குடிக்கக் கூறினார். அதைக் குடிக்க முடியாமல் அந்த மனிதர் திணறினார். "உப்புக் கரிக்கின்றது'' என்று ஞானியிடம் கூறினார். இப்பொழுது ஒரு ஜாடி தண்ணீரில் ஒரு கைப்பிடி உப்பைப் போட்டுக் கலந்தார். அதை அந்த மனிதரிடம் கொடுத்துக் குடிக்கக் கூறினார். அவர் அதைக் குடித்துவிட்டு, "இதைக் குடிக்க முடிகிறது. உப்பு லேசாகத்தான் தெரிகிறது'' என்றார். ஞானி அந்த மனிதரை அருகே உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்று அதில் ஒரு கைப்பிடி உப்பைப் போட்டார். பின்னர் ஏரியின் தண்ணீரைக் குடிக்கும்படி கூறினார். "இந்தத் தண்ணீர் நன்றாக உள்ளது...உப்பின் சுவை சிறிது கூடத் தெரியவில்லை''என்று அந்த மனிதர் கூறினார். "நான் எல்லாத் தண்ணீரிலுமே ஒரே அளவு உப்பைத்தான் போட்டேன்....அதன் தாக்கம் சிறிதளவு தண்ணீரில் அதிகமாகவும், அதிகமான தண்ணீரில் சிறிதளவும் தெரிந்தது.....வாழ்க்கையிலும் நமது வலிகளும், துன்பங்களும், பிரச்னைகளும் உப்பைப் போன்றதுதான்....! ....மனதை விசாலமாக்கி, பரந்த மனப்பான்மை ஏற்படும்போது வலியின் தாக்கம் குறைந்துகொண்டே வரும். ஏரி போன்று விசாலமான பின்னர் வலியின் தாக்கமே இருக்காது'' என்று கூறினார். உண்மையை உணர்ந்த அந்த மனிதரின் மனமும் விசாலமடையத் தொடங்கியது. இப்போதெல்லாம் அவர், வாழ்க்கையின் இன்ப துன்பங்களை புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார். -தங்க.சங்கரபாண்டியன் Thanks : Dinamani

Comments

Popular posts from this blog

தழும்பு!

சொந்த பந்தம்

அன்பு